நாய்களுக்கான ஓட்டப்பந்தயம். இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த நாய்கள்.

திருச்செந்தூர் அருகே மாநில அளவிலான நாய்களுக்கான ஓட்டப்பந்தயம். இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த நாய்கள்.;

Update: 2025-04-28 06:44 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் உள்ள சிவலூர் இபி மைதானத்தில் வி ஸ்கோயர் ரேஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் போட்டி நடந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி என தென்மாவட்டங்களைச் சேர்ந்த 64 நாய்கள் இந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டது. இரண்டு சீசன்களாக மாவட்ட அளவில் நடந்த இந்த போட்டி இன்று மூன்றாவது சீசனாக மாநில அளவில் இன்று நடந்தது. இதில் மொத்தமாக 6 ரவுண்டுகள் நாய்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடியது. இதில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 30 ஆயிரமும் வழங்கப்பட்டது. உடன்குடியில் நடந்த மாநில அளவிலான நாய்களுக்கான ஓட்டப்பந்தயத்தை காண்பதற்காக உடன்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

Similar News