கள் விற்ற இருவர் கைது
அம்மாபேட்டை அருகே அரசு தடை செய்யப்பட்ட கள் விற்ற இருவர் கைது;
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருளான கள் விற்பனை செய்யப்படுவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று கண்காணித்தபோது, கூச்சிக்கல்லூர், செங்காட்டுத் தோட்டம் பகுதியில் ஒரு நபர் கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், அதேபகுதியில் உள்ள பள்ளத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (69) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 5 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.அதேபோல, அருகில் உள்ள ராமச்சிபாளையம் பகுதியிலும் கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த சண்முகம் (57) என்பவரையும் அம்மாபேட்டை போலீசார் பிடித்து வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். அவரிடமிருந்தும் 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.