அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வசதி செய்து தரவேண்டும், சட்டசபையில் நாமக்கல் எம்எல்ஏ கோரிக்கை.

நாமக்கல் சட்டசபை தொகுதியில் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வசதி செய்து தரக்கோரி, சட்டசபையில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கோரிக்கை விடுத்தார்.;

Update: 2025-04-28 08:21 GMT
தமிழக சட்டசபைக் பள்ளிக்கல்வித்துறை கூட்டத்தொடரில், மானியக் கோரிக்கையின்போது, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம், தத்தாதிரிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் கட்டிடங்கள், ஆய்வகங்கள் கட்டித்தரப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே மாணவர்களின் நலன் கருதி மீண்டும் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தி ஆசிரியர் நியமிக்க வேண்டும். புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு உயிரியல் ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வேதியியல் ஆய்வகம், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு உயிரியல் ஆய்வகம் ஆகியவற்றை அமைத்து தர வேண்டும். சின்னமுதலைப்பட்டி அரசுஉயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பவை உள்ளிட்ட முன்வைத்து பேசினார். கோரிக்கைகளைஅதற்கு பதிலளித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாமக்கல் சட்டசபை தொகுதியில், லட்சத்திது43 . 1 கோடியே 17 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதலாக 8 வகுப்பறைகள், 2 சுகாதார வளாகங்கள், ஒரு அறிவியல் ஆய்வகம், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு நாட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிட ஒதுக்கப்பட்டு ஆசிரியர் நியமிக்கப்படு சின்ன முதலைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம்உயர்த்திட விதிமுறைகளுக்கு முதல்வரின் நடவடிக்கை உட்பட்டிருந்தால், அனுமதியினைப் பெற்று மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

Similar News