சாலையை சீரமைத்து கொடுத்த எம்.பிக்கு பாராட்டு.
மதுரை உசிலம்பட்டியில் சாலையை சீரமைத்து கொடுத்த எம்.பியை மக்கள் பாராட்டினார்கள்.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி கிராமத்திற்கு கல்லூத்து கிராமத்திலிருந்து செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் முயற்சியில் 65 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி, சாலையை அகலப்படுத்தி சீரமைத்து கொடுத்ததற்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நேற்று (ஏப்.27)நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச் செல்வனுக்கு உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினார்கள். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.