முஸ்லீம் லீக் தலைவர் பேட்டி

மதுரையில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் பேட்டி அளித்தார்.;

Update: 2025-04-28 10:21 GMT
மதுரையில் விரகனூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் பேட்டியளித்தார். அவர் பேசுகையில், "தமிழ் மாநில முஸ்லிம் லீக் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை முழுமனதாக ஏற்கிறோம், சிவன் சொத்து குல நாசம் என்பார்கள் ஏழை எளிய மக்களுக்கு எழுதி வைக்கப்பட்ட வக்பு சொத்தை பலர் அனுபவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே கோவை, வேலூர், சென்னையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை சந்தித்து மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக எடுத்து விளக்கினோம். இன்று மதுரையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை சந்தித்து மத்திய அரசு கொண்டுவந்த வக்பு திருத்தச் சட்டத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விளக்க உள்ளோம் என்றார் . தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Similar News