திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-05-15 08:17 GMT
திருப்பத்தூர் மாவட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு ஒரு டிவி வாங்கிக் கொடுங்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட முப்படை வீரர்கள் நல சங்கம் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கை* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ முப்படை வீரர்கள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராணுவ வீரர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் இழிவாக பேசிய முன்னாள் அமைச்சரும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜுவிற்கு வீட்டில் டிவி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. இல்லை என்றால் மாநில அரசோ அல்லது மத்திய அரசோ அவருக்கு ஒரு டிவியை வாங்கி கொடுங்கள் 5 வயது சிறுமிக்கு கூட நன்றாக தெரியும் ராணுவ வீரர்களின் செயல்பாடு குறித்து ஆனால் செல்லூர் ராஜுவிற்கு தெரியவில்லை என ஆதங்கத்துடன் கண்டன உரையாற்றிய ராணுவ வீரர்கள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு எதிராக அவரது பேச்சை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தேசிய கொடியை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

Similar News