வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே மணல் திருடி உயர்மட்ட பாலம் கட்டியதாக புகார்! பொக்லின் எந்திரம் பறிமுதல்!

வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே மணல் திருடி உயர்மட்ட பாலம் கட்டியதாக புகார்!;

Update: 2025-05-16 04:02 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே மணல் திருடி உயர்மட்ட பாலம் கட்டியதாக புகார்!ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு பொக்லின் எந்திரம் பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆம்பூர் பகுதி பாலாற்றின் குறுக்கே ரூபாய் 25 கோடி திட்ட மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்ட கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் பணி தொடங்கியது. இதற்கான பாலாற்றில் பள்ளம் தோன்றியபோது எடுக்கப்பட்ட மணல் மலை போல் ஆற்றில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மணல் கொள்ளையர்கள் ஒப்பந்த தாரர்கள் ஆகியோர் இணைந்து இரவு நேரங்களில் மணல் கொள்ளை தொடர்ந்து புகார் இருந்தது புகாரியின் அடிப்படையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் உட்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு எச்சரித்தனர். இருப்பினும் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட முறைகேடாக பாலாற்றில் இருந்து மணலை திருடி பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தால் அம்பலூர் கிராம நிர்வாகம் அலுவலர் பூபாலன் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் பொக் லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்து ஒப்பந்ததாரர் வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்து அம்பலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News