ஆம்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற வட்ட வழங்கல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது.
ஆம்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற வட்ட வழங்கல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது.;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற வட்ட வழங்கல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம், கிரீன் சிட்டி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து வெளி மாநிலங்களுக்கு கடுத்தப்படுவதாக வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் நிர்மலா மற்றும் ஆய்வாளர் திருஞானம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது கிரீன் சிட்டி பகுதியில் மறைவான இடத்தில் மூன்று மூட்டைகளில் கடத்தலுக்காக பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்ய வட்ட வழங்கல் தனி ஆய்வாளர் திருஞானம் முற்பட்ட போது அவர் மீது அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் தாக்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி காயமடைந்த வட்ட வழங்கல் ஆய்வாளர் திருஞானம் என்பவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் குறித்து ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு ஊழியரை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.