திருப்பத்தூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி
ஜோலார்பேட்டையில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வாழ்த்து தெரிவித்தார்;
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட அளவில் சி பி எஸ் இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் திருப்பத்தூர் மாவட்டத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தில் வசித்து வரும் ஈஸ்வரமூர்த்தி இவரது மகன் அருள் குமார் 491 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவனை அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் உடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாணவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்