நான்கு போர்வெல் குடிநீர் குழாய்களை திறந்து வைத்த எம்எல்ஏ
மதுரை தெற்கு தொகுதியில் நான்கு இடங்களில் போர்வெல் குடிநீர் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ பூமிநாதன் திறந்து வைத்தார்.;
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டு என் 45 காமராஜபுரத்தில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து என்.எம்.ஆர்.ரோடு, பாரதியார் தெரு,கக்கன் தெரு மற்றும் திரு.வி.க.தெரு ஆகிய நான்கு இடங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு அதனை மக்களின் பயன்பாட்டிற்காக பூமிநாதன் எம்எல்ஏ நேற்று (மே.15) திறந்து வைத்தார். உடன் தெற்கு மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா, உதவி ஆணையர் சாந்தி, கவுன்சிலர் சண்முகவள்ளி, உதவி செயற்பொறியாளர் மயிலேறி நாதன் உதவி பொறியாளர் சூசை, மதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர். மதிமுக மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, மாவட்ட செயலாளர் முனியசாமி, திமுக வட்ட செயலாளர் முருகன், மதிமுக வட்ட செயலாளர்கள் மாயழகு, பாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.