ஜல்லிக்கட்டை பார்க்க சென்றவர் வாகன விபத்தில் பலி

மதுரை திருமங்கலம் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த நபர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2025-05-16 05:15 GMT
மதுரை ஆரப்பாளையம் சோனை கோவில் தோப்புப் பகுதியைச் சேர்ந்த கணேசன் (40) என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்தார்.இவர் கடந்த 4-ஆம் தேதி திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் கரடிக்கல்- சோழவந்தான் சாலை பிரிவில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்து வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த கணேசனை மதுரை ராஜாஜி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (மே.14)இரவு உயிரிழந்தார்.இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News