மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை

தமிழ்நாட்டில் வெளியான 10வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா பள்ளி மாணவர் 498/500 வாய்ப்பண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை;

Update: 2025-05-16 05:40 GMT
தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தருமத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மற்றும் ராணி ஆகிய தம்பதியினரின் மகன் மனிஷ் குமார் என்பவர் 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார், மேலும் இவருடைய தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார், இவரது தாயார் ராணி ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார், மேலும் இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம், தமிழ் மொழி பாடத்தில் 98 மதிப்பெண்களும், ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100, மொத்தமாக 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் பெற்று சாதனைப்படுத்துள்ளார்.

Similar News