கோவை: காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி !

வைதேகி நீர்வீழ்ச்சிக்கு சென்ற பூலுவப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் அபிமன்யூ என்பவரை நேற்று இரவு ஒற்றை காட்டு யானை தாக்கியது;

Update: 2025-05-16 08:42 GMT
கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பலியானார். போளுவாம்பட்டி அருகே வைதேகி நீர்வீழ்ச்சிக்கு சென்ற பூலுவப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் அபிமன்யூ (33) என்பவரை நேற்று இரவு ஒற்றை காட்டு யானை தாக்கியது. பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்த சுரேஷ், நண்பர் சரவணனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சுரேஷுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News