பருவ மலைக்கு முன்பு வீடுகள் கட்டித்தர மலை கிராம மக்கள் கோரிக்கை
கோரிக்கை;
கூடலுார் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பளியன்குடி பகுதியில் 53 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வீடு கட்டி கொடுத்த நிலையில்,தற்போது அவைசேதமடைந்த உள்ளது. இந்நிலையில் புதியதாக 53 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. தற்போது பருவமழை துவங்குவதற்கு முன் வீடுகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.