சரவணம்பட்டியில் இளைஞர்களிடம் செல்போன்கள், லேப்டாப்கள் திருட்டு - போலீசார் விசாரணை !

ஐடி பூங்காவிற்கு அருகில் இரண்டு ஆண்கள் விடுதிகளில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபர், அங்கிருந்த இளைஞர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை திருடி சென்றதால் பரபரப்பு.;

Update: 2025-05-16 13:00 GMT
கோவை மாநகர் சரவணம்பட்டி அருகே உள்ள ஐடி பூங்காவிற்கு அருகில் இரண்டு ஆண்கள் விடுதிகளில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபர், அங்கிருந்த இளைஞர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த இளைஞர்கள், விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர், இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விடுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News