கோவை: வீட்டுமுன் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு

வாடகை வீட்டு தகராறில் வீட்டின் முன் கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு.;

Update: 2025-05-17 07:13 GMT
கோவை, பொன்னையராஜபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் சாமுவேலுக்கும், வீட்டின் உரிமையாளர் மோகன்ராவ் ஷிண்டேவுக்கும் இடையே நிலவி வரும் வாடகை தகராறு முற்றியுள்ளது. நேற்று மோகன்ராவ் ஷிண்டே டிராக்டர் மூலம் கட்டிடக் கழிவுகளைக் கொண்டு வந்து சாமுவேல் வீட்டின் முன்பு கொட்டி, அவர்கள் வீட்டிற்குச் செல்லும் வழியை அடைத்துள்ளார். நீண்ட காலமாக வாடகை செலுத்தி வரும் சாமுவேல், உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகாஷ் ஆகியோர் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக புகார் அளித்துள்ளார். ஆகாஷ் தனது மகளை கிண்டல் செய்ததாகவும், குடிநீர் மற்றும் மின் இணைப்பை துண்டித்து, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும் சாமுவேல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது சகோதரியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தன்னை ஆகாஷ் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சாமுவேல் ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து அச்சுறுத்தல் அளித்து வரும் மோகன்ராவ் ஷிண்டே மற்றும் அவரது மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News