கரூரில்,அலங்கரிக்கப்பட்ட ரத்தத்தில் பல்வேறு அம்மன் அலங்காரத்தில் பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது

கரூரில்,அலங்கரிக்கப்பட்ட ரத்தத்தில் பல்வேறு அம்மன் அலங்காரத்தில் பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2025-05-17 10:21 GMT
கரூரில்,அலங்கரிக்கப்பட்ட ரத்தத்தில் பல்வேறு அம்மன் அலங்காரத்தில் பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது. கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்க்காக ஆண்டுதோறும் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்வதும், பிறகு அந்த கம்பத்தினை ஆற்றில் விடும் நிகழ்வும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்தவகையில் கடந்த 11-ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அதன் பிறகு தினமும் பக்தர்கள் புனிதநீர், பால் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெங்கமேடு, தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இருந்து 48 பூத்தட்டுகள் இன்னொளி அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று மாரியம்மன் கோவிலை அடைந்தனர். கொண்டு சென்ற பூக்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News