கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.;
கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் விடுதி கூட்ட அரங்கில் கரூர் கூடைப்பந்து குழு, கரூரில் செயல்படும் முன்னணி நிறுவனங்கள் பங்களிப்புடன் இணைந்து நடத்தும் 65 ஆம் ஆண்டு எல் ஆர் ஜி நாயுடு நினைவு சுழற் கோப்பை ஆண்களுக்கான போட்டியும், கேவிபி வங்கி சுழற் கோப்பைக்கான 11ம் ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய கூடை பந்து போட்டியும் கரூரில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மே 22 முதல் 27ஆம் தேதி வரை 6 நாட்கள் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கரூர் கூடைப்பந்து குழுவின் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் சூரிய நாராயணா, சண்முகசுந்தரம், இந்திரமூர்த்தி, பாலசுப்பிரமணியன், செயலாளர் முகமது கமாலுதீன், பொருளாளர் பெரியசாமி, இணைச் செயலாளர்கள் வெங்கடேசன், முகமது அமீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செய்தியாளிடம் தெரிவித்த கரூர் கூடைப்பந்து குழு தலைவர் பாஸ்கர், இந்தியாவின் தலைசிறந்த அணிகளிலிருந்து வீரர்கள் பங்கேற்க உள்ள இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 8- அணியும், பெண்கள் பிரிவில் 4 அணியும் மோத உள்ளது. ஆண்கள் போட்டிகள் லீக் கம் நாக்கவுட் முறையிலும், பெண்கள் போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த போட்டிகளை கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா, தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.