ராயப்பன் பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி வைத்திருந்தவர் கைது

கைது;

Update: 2025-05-17 14:07 GMT
இராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (மே.16) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது கே.கே பட்டி சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சரவணன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 360 லாட்டரிகளை பறிமுதல் செய்த போலீசார் சரவணனை கைது செய்தனர்.

Similar News