போடி நகர் காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (மே.16) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது போடி நகர் பகுதியில் முருகன் என்பவர் அவரது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் அளித்த தகவலின் பெயரில் புகையிலை பாக்கெட்டுகளை மொத்த விற்பனை செய்த கார்த்திகேயன் என்பவரையும் கைது செய்தனர்.