கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது கணவர் 3 வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் பெரியகுளத்தில் உள்ள கணவரின் இல்லத்திற்கு நேற்று முன் தினம் அவரது மகள்களுடன் வந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த கணவரின் தம்பி கனகராஜ் அவரது மகன் வெங்கடேஷ் ஆகியோர் வீட்டிற்குள் வரக்கூடாது என ஆபாசமாக பேசியதுடன் முத்துலட்சுமியை தாக்கி உள்ளனர். பெரியகுளம் போலீசார் தாக்கிய இருவர் மீதும் வழக்கு (மே.16) பதிவு.