அம்மச்சியாபுரம் பகுதியில் மனைவி குடும்பத்தை தாக்கிய கணவர் குடும்பத்தினர்
தாக்குதல்;
குன்னூர், அம்மச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுசிலா. இவரது கணவர் செல்வகுமார். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ஒரு வாரமாக சுசிலா அவரது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் சுசிலா வீட்டிற்கு சென்ற செல்வகுமாரின் குடும்பத்தினர் சுசிலாவின் தந்தை, தம்பி உள்ளிட்டோரை தாக்கி உள்ளனர். க.விலக்கு போலீசார் செல்வகுமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு.