கரூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதி.
கரூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதி.;
கரூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதி. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, சின்னவடுகப்பட்டி அருகே அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதில் கோவில்பட்டியைச் சேர்ந்த சசிகுமார், அருண் திருப்பதி, சிறுவன் காமாட்சி அஸ்வின், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி எழில் தர்ஷனா, இளம் பெண் ஹேம வர்ஷினி ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு விட்டுள்ளதாக முதலமைச்சர் சார்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து இன்று இரவு 8 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இந்த நிதி உதவியை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.