கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து இரண்டு வருடமாக முதலிடம்
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் துணைச் செயலாளர் Dr. R. N. பாபா, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் ஆலோசனை குழு தலைவர் சிவராம கிருஷ்ணன், பரிசுகளை வழங்கினார்;
பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் அசோஸியேஷன் நடத்திய பரிசளிப்பு விழா. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள இஷ்டா உணவக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட முதல் டிவிஷனில் ரோவர் ஸ்டார்ஸ் அணி முதல் இடத்தையும், PDCA XI அணி இரண்டாம் இடத்தையும் வென்றனர். இரண்டாம் டிவிஷனில் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி முதல் இடத்தையும் புனித தாமஸ் அணி இரண்டாம் இடத்தையும் வென்றனர். மூன்றாம் டிவிஷனில் ப்ரைடு ஆப்ஃ பெரம்பலூர் அணி முதல் இடத்தையும் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி இரண்டாம் இடத்தையும் வென்றனர். சிறந்த மட்டையாளர்கள், சிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும் தொடர் நாயகன் உள்ளிட்ட விருதுகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. பள்ளிகளுக்கு இடையேயான சி எஸ் கே கோப்பையில் முதல் இடத்தை ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் பள்ளி அணியும் இரண்டாம் இடத்தை கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி அணியும் வென்றனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் துணைச் செயலாளர் Dr. R. N. பாபா, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் ஆலோசனை குழு தலைவர் சிவராம கிருஷ்ணன், பெரம்பலூர் கிரிக்கெட் அசோஷியேஷன் செயலாளர் எஸ். கே. பழனியப்பன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.