கோவை: உடல்நலக் குறைவால் பெண் யானை- தீவிர கண்காணிப்பு
உடல் நலக்குறைவால் விழுந்து கிடந்த யானையை தீவிரமாக கண்காணிக்கும் மருத்துவ குழு.;
கோவை, மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக்கழக மேற்குப் பகுதியில் நேற்று உடல்நலக் குறைவால் பெண் யானை ஒன்று விழுந்து கிடந்தது. வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், குட்டியுடன் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்த யானை சோர்வடைந்து விழுந்ததைக் கண்டனர். போளுவாம்பட்டி காப்புகாட்டை ஒட்டிய பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் வனப் பாதுகாவலர்கள், கோவை வனச்சரக அதிகாரிகளுடன் இணைந்து யானையின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கால்நடை மருத்துவக் குழுவினரும் வனத்துறையினரும் இணைந்து யானைக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், வனத்துறையினர் இப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.