கரூர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கினார் செந்தில் பாலாஜி.

கரூர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கினார் செந்தில் பாலாஜி.;

Update: 2025-05-18 02:28 GMT
கரூர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கினார் செந்தில் பாலாஜி. கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடைபெற்ற சாலை விபத்தில் முதல் கட்டமாக 4 பேரும் சிகிச்சை பலனின்றி ஒருவர் என 5 பேர் உயிரிழந்தனர். 16க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களுக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று மாலை அறிவிப்பு செய்தார். இதன் அடிப்படையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தமிழக அரசு வழங்கிய நிதி உதவியை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Similar News