கோவை: சீமான் பதநீர் அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

சீமான் கோவையில் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து பதநீர் அருந்திய வீடியோ வைரல்.;

Update: 2025-05-18 03:28 GMT
கோவையில் நடைபெற உள்ள நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி தொண்டர்களுடன் பதநீர் அருந்தி மகிழ்ந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தமிழினம் பேரிழ்ச்சி என்ற தலைப்பில் இன்று கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கான முன்னேற்பாடாக, நேற்று மாலை சீமான் மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். நடைப்பயிற்சியின் போது, சாலையோரத்தில் அமைந்திருந்த ஒரு பதநீர் கடையில் அவர் திடீரென நுழைந்து, தனது தொண்டர்களுடன் இணைந்து பதநீர் அருந்தினார். இது அங்கு இருந்தவர்களிடம் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Similar News