அரவக்குறிச்சி அருகே டூவீலர்கள் மோதல். இருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

அரவக்குறிச்சி அருகே டூவீலர்கள் மோதல். இருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.;

Update: 2025-05-18 12:21 GMT
அரவக்குறிச்சி அருகே டூவீலர்கள் மோதல். இருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் வயது 56. இவர் மே 17ஆம் தேதி காலை 11 மணியளவில், கரூர் - திண்டுக்கல் பைபாஸ் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அரவக்குறிச்சி பைபாஸ் சாலையில் செயல்படும் தனியார் ஓட்டல் எதிரே சென்றபோது, அதே சாலையில் பின்னால் வந்த, மதுரை மாவட்டம், ராயலான் நகர், 7-வது தெருவை சேர்ந்த சஞ்சய் வயது 28 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், தங்கராஜ் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு தங்கராஜை திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையிலும், சஞ்சயை மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த தங்கராஜின் மகன் முத்தையா வயது 29 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

Similar News