வேப்பந்தத்தை ஊராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய சட்டமன்ற உறுப்பினர்
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 157.98 இலட்சம் மதிப்பீட்டில் தானியகளம், நியாய விலை கடை கட்டிடம், கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை ஆகிய பணிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் தொடங்கி வைத்தார்.;
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் வாலிகண்டபுரம், தம்பை ,அயன்பேரையூர், பிம்பலூர், மேட்டு மறவநத்தத்தம், காரியனூர், ஜெயந்தி காலணி, வெள்ளுவாடி ஆகிய ஊர்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 157.98 இலட்சம் மதிப்பீட்டில் தானியகளம், நியாய விலை கடை கட்டிடம், கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை ஆகிய பணிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் தொடங்கி வைத்தார் உடன் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் பெரம்பலூர் மாவட்ட கழக பொருளாளர் செ ரவிச்சந்திரன் பெரம்பலூர் மாவட்ட கழக துணை செயலாளர் நூருல் ஹிதா இஸ்மாயில் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் என் ஜெகதீஸ்வரன் பெர்பலூர் மாவட்ட அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பல்வேறு அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் என பலர் பங்கேற்றனர்