இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தாளாளர் வாழ்த்து

இன்றைய கால மாணவர்கள் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர் அவர்கள் மன வலி உடல் தகுதியும் பெற வேண்டும் என்றால் ஏதாவது ஒரு விளையாட்டில் அதிகமாக அவர்கள் பயிற்சி எடுக்க வேண்டும் அப்போதுதான் பல்வேறு துறைகளில் சாதிக்க முடியும் தாளாளர் விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை;

Update: 2025-05-19 04:42 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் இணைந்து நடத்திய பள்ளிகள் அளவிலான கிரிக்கெட் போட்டியானது நடைபெற்றது இப் போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பத்து பள்ளி அணிகள் கலந்து கொண்டன. போட்டியானது பிப்ரவரி ஆறாம் தேதி தொடங்கப்பட்டு 9ஆம் தேதி நிறைவு பெற்றது இப்போது ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் இறுதி போட்டியில் 10 விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றன அதற்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர்களை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சேவைச் செம்மல் சிவசுப்ரமணியம் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களுக்கு படிப்புடன் விளையாட்டும் மிக முக்கியம் என்று அறிவுறுத்திய அவர், முறையான தொடர் பயிற்சிப்பெற்று தமிழகத்திற்காவும் இந்தியாவிற்காகவும் விளையாடும் அளவிற்கு தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். இதில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன், ஸ்ரீராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News