அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது;
தாராபுரம் 5 சாலை சந்திப்பு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1977-1978-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ -மாணவிகள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அரசு உயர் நிலைப் பள்ளியில் முன்னாள் ஆசிரியர்கள் தங்களது வகுப்பில் படித்த மாணவர்கள் பற்றி ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களின் அனுபவங்களை எடுத்துக் கூறினர். அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவன் டி.கபிலன் தலைமையில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நடை பெற்ற நிகழ்ச்சியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ-மாணவிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்கள் பள்ளிப் பருவத்தில் நடந்த அனுபவங்கள் மற்றும் சம்பவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.