பேங்காக்-ல் நடைபெற்ற உலக பவர் லிஃப்டிங் சாம்பியன் போட்டி

பேங்காக்-ல் நடைபெற்ற உலக பவர் லிஃப்டிங் சாம்பியன் போட்டியில் டெத் லிஃப்ட் மற்றும் எஸ்.பி.டி என 2 பிரிவுகளிலும் 2ஆம் பரிசு வென்ற திண்டுக்கல் இளைஞர்;

Update: 2025-05-19 09:03 GMT
பேங்காக் நாட்டில் கடந்த 2025 மே 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை உலக ரா பவர் லிஃப்டிங் கூட்டமைப்பு சார்பில் உலக பவர் லிஃப்டிங் சாம்பியன் 2025 நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பேங்காக் உட்பட 11 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில், இந்திய அமெச்சூர் பவர்லிஃப்டிங் சங்கம் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 நபர்கள் உட்பட இந்தியாவை சேர்ந்த 48 வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவி கல்லூரி 2 ஆம் வருட பி.காம் மாணவர் மகாராஜன் கலந்து கொண்டு 90 கிலோ எடை பிரிவில் டெத் லிப்ட் போட்டியில் இரண்டாம் பரிசும், எஸ்.பி. டி பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். மகாராஜன் ஏற்கனவே 15 மாநில அளவிலான பவர்லிஃப்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு 10 முறை பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளார். அதேபோல், தேசிய அளவிலான பவர்லிஃப்டிங் போட்டி கலந்து கொண்டு தங்கப்பதக்கமும், ஏசியன் 2023 போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News