மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகை

ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பட்டியில் தனிநபர்கள் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை திமுக அமைச்சர் ஐ பெரியசாமி கண்டித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் கேட்கவில்லை என கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு;

Update: 2025-05-19 09:24 GMT
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டியில் கடந்த இருநூறு ஆண்டுகளாக பொதுமக்கள் கோவில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு ஊரின் மத்தியில் உள்ள இடத்தை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் தனி நபர்கள் நான்கு பேர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துக்கொண்டு பொதுமக்கள் பயன்படுத்த விடாமல் தொந்தரவு செய்து வருவதாக அப்பகுதி மக்கள் பலமுறை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இடம் மனு அளித்துள்ளனர். திமுக அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியும் ஆக்கிரமிப்பாளர்கள் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனிநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த இடத்தை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறி 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

Similar News