அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் பணிபுரிபவர்களுக்கு சீருடை வழங்கு விழா.

அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் பணிபுரிபவர்களுக்கு சீருடை வழங்கு விழா.;

Update: 2025-05-19 10:49 GMT
அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் பணிபுரிபவர்களுக்கு சீருடை வழங்கு விழா. கரூர் கூடைப்பந்து குழுவின் சார்பாக 65 ஆம் ஆண்டு ஆண்களுக்கான எல் ஆர் ஜி நாயுடு நிறைவு சுழற் கோப்பை மற்றும் 11ஆம் ஆண்டு கேவிபி சுழற்க்கோப்பை பெண்களுக்கான அகில இந்திய கூடை பந்து போட்டி மே 22 முதல் 27ஆம் தேதி வரை கரூர் திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பணி புரியும் தன்னார்வலர்கள், PETS, கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள், ஒலி,ஒளி அமைப்பாளர்கள், ஸ்கோர் போர்டு ஆபரேட்டர்கள், டிஜிட்டல் அமைப்பாளர்கள், மருத்துவ குழுவினர், உணவு கேன்டீன் நடத்தும் பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சீருடை வழங்கும் விழா நேற்று இரவு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில், கரூர் கூடைப்பந்து குழுவின் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. சீருடைகளைப் பெற்றுக் கொண்ட அனைவரும் அகில இந்திய கூடைப்பந்து குழு போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Similar News