கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.;

Update: 2025-05-19 11:26 GMT
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே லிங்கத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அரசப்பன் வயது 39. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசப்பனுக்கு கேன்சர் நோய்க்கு உள்ளது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் எந்த முன்னேற்றமும் அவருக்கு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து மே 17ஆம் தேதி இரவு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த அரசப்பனின் மனைவி பிரேமா வயது 37 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த அரசப்பன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News