தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பெரியகுளம் தென்கரைப் பகுதியில் நேற்று (மே.18) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது திருவள்ளுவர் சிலை அருகே தினேஷ்குமார் என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தினேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.