ஜப்பானுக்கும் கரூருக்கும் மொழியின் அடிப்படையில் பாலம் அமைக்க புதிய திட்டம்.

ஜப்பானுக்கும் கரூருக்கும் மொழியின் அடிப்படையில் பாலம் அமைக்க புதிய திட்டம்.;

Update: 2025-05-19 12:25 GMT
ஜப்பானுக்கும் கரூருக்கும் மொழியின் அடிப்படையில் பாலம் அமைக்க புதிய திட்டம். ஜப்பான் நாட்டில் குறைந்து வரும் மக்கள் தொகை காரணமாக, உற்பத்தி திறனை மேம்படுத்தவும், உலகளாவிய தொடர்பை விரிவுபடுத்தவும் ஜப்பானிய மொழியை தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் பயிற்றுவிக்க ஜப்பானிஸ் இன்டர்நேஷனல் கோபரேஷன் ஏஜென்சியின் இந்திய நிர்வாகிகள் கரூரில் முகாமிட்டு உள்ளனர். இவர்களை பரணி பார்க் கல்வி நிறுவனத்தின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஜப்பான் நிறுவனத்தின் பொறுப்பாளர் அசோக் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, ஜப்பானிலிருந்து உதயமா அக்கி மற்றும் யசோலா ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் தமிழ் கற்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அதே சமயம் இங்குள்ளவர்களுக்கு ஜப்பானிய மொழியை பயிற்றுவிக்கவும் இவர்கள் வந்துள்ளனர் எனவும், தற்போதைய நிலையில் ஜப்பானில் கரூரை சேர்ந்தவர்கள் 80 பேர், தமிழக அளவில் 250 பேர் பணியாற்றி வருவதாகவும், கரூரில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஆயிரம் மாணாக்கர்கள் பயின்று வருவதாகவும், 70 வயது உடைய நபரும் ஜப்பானின் மொழியை கற்பதில் ஆர்வம் கொண்டு உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். மொழிகளை பயிற்றுவிப்பது மூலமும், கற்றுக் கொள்வதன் மூலமும் ஜப்பானுக்கும் கருவூருக்கும் மொழி, வேலை வாய்ப்பு, பொருளாதார ஏற்றம் போன்ற முக்கிய கூறுகளின் அடிப்படையில் பாலம் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News