வடக்கு பாளையத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி.
வடக்கு பாளையத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி.;
வடக்கு பாளையத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி. கரூர் வடக்கு பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் காமராஜர் மகள் யாஷிகா வயது 15. இவர் அன்பில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்தார். இரு தினங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியானது. அதில் யாஷிகா எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனவிரக்கி அடைந்த யாஷிகா மே 17ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று அவரது தாயார் கலாவதி வயது 42 வீடு திரும்பிய போது, தனது மகள் தற்கொலை செய்து கொண்ட அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த யாஷிகாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.