வாகனம் மோதி சிறுத்தை குட்டி உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை குட்டி உயிரிழப்பு;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலை சாலையில் டம் டம் பாறை அருகே 10 மாதம் சிறுத்தை குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. மேற்படி சம்பவம் குறித்து தேவதானப்பட்டி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடைக்கானல் மலை சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால் வாகனங்களில் செல்வோர் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். அவற்றை துன்புறுத்தும் நோக்கிலோ அல்லது அவற்றின் அருகிலோ செல்ல முயற்சிக்கக் கூடாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.