அனுமன் தீர்த்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கிருஷ்ணகிரி அணையில் திறந்து விடப்பட்ட நீரால் அனுமன் தீர்த்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு;
தமிழகத்தில் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் அதிக நீர்வரத்து காரணமாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து நொடிக்கு 1682 கன அடி தண்ணீர் திறந்து விட்டுள்ளார்கள். இதனால் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் இன்று மே 20 காலை 10 மணியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் நீர் கடல் போன்று காணப்படுகிறது. மேலும் தொடர்ந்து அப்பகுதியில் சாரல் மழை பொழிந்து வருகிறது.