மாவட்ட ஆட்சியரிடம் கல்லிடை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மனு
கல்லிடை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர்;
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில்வே கேட் தெற்கு பாப்பாங்குளம் செல்லும் தார் சாலை பல ஆண்டுகளாக கரடுமுரடாக காட்சியளிக்கிறது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கல்லிடை ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் கவிஞர் கல்லிடை உமர் பாரூக், நிர்வாகி அனீஸ் பாத்திமா ஆகியோர் இன்று (மே 20) மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.