நெல்லையில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (மே 20) தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் காவல்துறையினரின் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றது. மேலும் நெல்லை மாவட்ட பகுதிகளின் அனைத்து இடங்களிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.