தேவதானப்பட்டியை சேர்ந்தவர் தீபன் சக்ரவர்த்தி. இவர் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு வார்த்தைகளால் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டார். இதுகுறித்து அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வி.சி., ஒன்றிய துணை அமைப்பாளர் காமாட்சி தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தீபன் சக்கரவர்த்தியை நேற்று (மே.19) கைது செய்தனர்.