தேனி ரயில்வே நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த இயந்திரம் அடிக்கடி பழுதாகிறது. இதனால் டிக்கெட் வழங்கும் இடத்தில் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில், நிற்கும் நிலை உள்ளது. இந்த இயந்திரத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.