தேனி மாவட்டத்தில் 1065 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு 2 வயது முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி செயல்பாடுகள், விளையாட்டு கல்வி அளிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில் தற்போது சேர்க்கை பணி நடந்து வருகிறது. மேலும் தற்போது இம்மையங்களில் ஆதார் வழங்கும் பணியும் நடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.