வருசநாடு பகுதியை சேர்ந்தவர் சுருளி ஆண்டவர் (46). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலையை விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். உடல்நலக் குறைபாட்டின் காரணமாக வேதனையில் இருந்து வந்த அவர் நேற்று (மே.19) அப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வருசநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.