கம்பத்தில் கஞ்சா வைத்திருந்த நான்கு பேர் கைது

கைது;

Update: 2025-05-20 12:07 GMT
கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மே.19) கம்பம் பைபாஸ் சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த ரத்தினகுமார், ராமு, சுபாஷ் சந்திரபோஸ், பிரியங்கா ஆகிய நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 1.250 கிலோகிராம் கஞ்சாவை கேரளாவில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

Similar News