அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது நண்பரான கணேசன் என்பவர் ராஜாவின் இருசக்க வாகனத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். கணேசன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடப்பட்ட நிலையில் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்ட அல்லிநகரம் போலீசார் திருட்டில் ஈடுபட்ட 15,16,17 வயது கொண்ட 3 சிறுவர்களை நேற்று (மே.20) கைது செய்தனர்.