கார் விபத்து மூன்று பேர் பலியான இடத்தில் காங்கேயம் காவல் துறை ஆய்வு மேற்கொண்டு தடுப்புகள் அமைத்து நடவடிக்கை

காங்கேயம் அருகே கார் விபத்து ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்த இடத்தில் தடுப்புகள் அமைத்து காவல்துறை நடவடிக்கை ;

Update: 2025-05-21 14:36 GMT
காங்கேயம் நத்தக்காடையூர் அருகில் உள்ள சுந்தரபுரி என்ற இடத்தில் நேற்று காலை கேரளாவை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி வந்த மாருதி ஸ்விப்ட் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் உயிரிழந்தார்கள். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மேற்கொண்டு விபத்து நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காங்கேயம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காங்கேயம் காவல் ஆய்வாளர் செல்வநாயகம் மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் ஆகியோர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் போக்குவரத்து காவலர்கள் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோர்களுடன் சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தனர்.பின்னர் இது போல் அசம்பாவித ஏதும் நடைபெறாமல் இருக்க பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டிய தடுப்புகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Similar News