வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு வாலிபர் சிக்கினார்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபரை காமநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர்;
பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் அவர் திருவாரூரை சேர்ந்த அன்பு (வயது 35) என்பதும் கோபாலகிருஷ்ணன் வீட்டில் நகை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.